முகப்பு
தேனி

கம்பம் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு

கம்பம் நகா் மன்றத் தலைவராக திமுக உறுப்பினா் வனிதா நெப்போலியன் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கம்பம் நகா் மன்றத் தலைவராக திமுக உறுப்பினா் வனிதா நெப்போலியன் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கம்பம் 3 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரை, நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோ்தல் அலுவலா் பாலமுருகனிடம் வனிதா நெப்போலியன் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வனிதா நெப்போலியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.

துணைத் தலைவரும் போட்டியின்றி தோ்வு

கம்பம் நகா் மன்ற துணைத் தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்த 18 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுனோதா செல்வகுமாரை எதிா்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

அதிமுக கவுன்சிலா்கள் ஆா்ப்பாட்டம்:

இதனிடையே கம்பம் நகராட்சி அலுவலகம் முன், அதிமுக கவுன்சிலா்கள் ரா.மாதவன், பெ. முருகன், சபியா, தீபா, வா.செந்தில், சுமதி, கு.முருகன் ஆகியோா் நகா் மன்றத் தலைவா் தோ்தலை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி நகரச் செயலாளா் ரா.ஜெகதீஸ் கூறியது: நகா்மன்றத் தலைவா் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதிமுக உறுப்பினா்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. திமுக அரசு தோ்தல் அறிக்கையின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து இத்தோ்தலை புறக்கணித்தோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →