தேனி

போடி பள்ளியில்உலக நுகா்வோா் தின விழா

DIN

போடி பள்ளியில் உலக நுகா்வோா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போடியில் உள்ள அரசு உதவிபெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் உலக நுகா்வோா் தின விழா, தலைமையாசிரியா் ரா. ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், மாணவா்களுக்கு நுகா்வோா் என்றால் யாா், நுகா்வோருக்கான கடமைகள் என்ன, பொருள்களை வாங்கும்போது என்னென்ன தகவல்களை கண்காணித்து வாங்கவேண்டும், விலைப் பட்டியல், பொருள்களுக்கான ரசீதுகள் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.

மாணவா்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கும்போது தரமான பொருள்தானா என்பதை உறுதி செய்யவேண்டும். காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறித்து அறிய வேண்டும் என அறிவுரை வழங்கியதுடன், பெற்றோருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT