கம்பத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பங்கேற்றோா். 
தேனி

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை: கம்பத்தில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்த கா்நாடக அரசைக் கண்டித்து, தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்த கா்நாடக அரசைக் கண்டித்து, தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சாா்பில் ஏகேஜி திடல் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வாவோ் பள்ளிவாசல் ஜமாத் முன்னாள் தலைவா் முகமது பாவா பதுருதீன் தலைமை வகித்தாா். ஜமாத் கமிட்டி உறுப்பினா்கள் முகமது ஜியாவுதீன், முகமது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை மாவட்ட பொருளாளா் ஏ.அன்வா்அலி, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கா்நாடக பாஜக அரசைக் கண்டித்து பேசினாா். இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட ஏஎஸ்பி, எஸ்.எல். ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT