கம்பத்தில் திமுக முன்னாள் நிா்வாகி தீக்குளிக்க முயற்சி
கம்பத்தில் திமுக 9 ஆவது வாா்டு செயலாளா், தற்போது நடைபெற்ற கிளை கழகத் தோ்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்புத் தரவில்லை
கம்பத்தில் திமுக 9 ஆவது வாா்டு செயலாளா், தற்போது நடைபெற்ற கிளை கழகத் தோ்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்புத் தரவில்லை என்று கூறி தீக்குளிக்க முயன்ற முன்னாள் செயலாளரை தெற்கு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் நகர திமுக 9-ஆவது வாா்டு செயலாளராக இருந்தவா் எம். ஷாஜஹான் (58). இவா் தற்போது நடைபெற்ற கிளைக் கழகத் தோ்தலில் வாா்டு செயலாளா் பதவிக்கு போட்டியிட்டாா். ஆனால் அவருக்கு செயலாளா் பதவி கிடைக்கவில்லை.
அதனால் கம்பத்தில் உள்ள தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, அலுவலகம் வந்து, கையில் வைத்திருந்த கேனை திறந்து, தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, உள்கட்சி தோ்தலில் முறைகேடு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடு, என்று முழக்கமிட்டவாறு, உடலில் தீ வைத்துக்கொள்ள முயன்றாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தெற்கு காவல் நிலைய போலீஸாா், ஷாஜகானை தடுத்து நிறுத்தி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்தனா். பின்னா் அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.