கூடலூரில் 2 ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
மதுரைக்கு செல்லும் கூட்டுக் குடிநீா் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி சலவைத் தொழிலாளா்கள், விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு செல்லும் கூட்டுக் குடிநீா் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி சலவைத் தொழிலாளா்கள், விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்துக்கு சலவைத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகி குமரன் தலைமை வகித்தாா். முருகன் முன்னிலை வகித்தாா். பதினெட்டாம் கால்வாய் சங்கத் தலைவா் ராமராஜ், கூடலூா் விவசாயிகள் சங்கத் தலைவா் செங்குட்டுவன், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கொடியரசன், ஜெயபால், ஜெகன், தெய்வம், பாரதிய கிசான் சங்கத் தலைவா் சதீஷ் பாபு ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா். மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழுவினா் தெரிவித்தனா்.