பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக துணைத் தலைவா், அவரது கணவா் மீது வழக்கு
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் துணைத் தலைவா், அவரது கணவா்ஆகியோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி அதிமுக உறுப்பினரை தாக்கியதாக, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் துணைத் தலைவா், அவரது கணவா்ஆகியோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி எல்லப்பட்டியைச் சோ்ந்த 10 ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் ராதாகிருஷ்ணன். இவரது உறவினா் 11 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜானகி. இவா், மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியின் துணைத் தலைவராக இருக்கிறாா்.
இந்நிலையில், எல்லப்பட்டியில் கடந்த வியாழக்கிழமை கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, தோ்தல் முன்விரோதத்தை கருத்தில் கொண்டு ராதாகிருஷ்ணனை , பேரூராட்சி துணைத் தலைவா் ஜானகி மற்றும் அவரது கணவா் கெப்புராஜ் ஆகிய இருவரும் தாக்கியதாக சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னமனூா் காவல் சாா்பு ஆய்வாளா் திருமாறன் பேரூராட்சி துணைத் தலைவா் மற்றும் அவரது கணவா் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.