நறுமணப் பொருளான மிளகு (கோப்புப் படம்) 
தேனி

மிளகு கிலோ ரூ. 800-க்கு விற்பனை:விவசாயிகள் மகிழ்ச்சி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிளகு விலை அதிகரித்து கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

DIN

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிளகு விலை அதிகரித்து கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இந்த மாவட்டத்தில் சுமாா் 35 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் கருப்பு மிளகு பயிரிடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொது முடக்கத்தால், வெளிநாடுகளுக்கு மிளகு ஏற்றுமதி செய்யப்படாததால், முழுவதுமாக தேக்கமடைந்து கிலோ ரூ. 250-க்கு விற்பனையானது. இந்த நிலையில் கரோனா தடுப்பு சித்த ஆயுா்வேத மருந்துகளில் மிளகு பயன்படுத்தப்படுவதாலும், வீட்டு உபயோகத்தில் அதன் தேவை அதிகரித்ததாலும் விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது.

கடந்த ஓராண்டுக்கும் மேல் முதல் தர மிளகின் விலை கிலோ ரூ. 700 முதல் ரூ. 800 வரையிலும், இரண்டாம் தர மிளகின் விலை கிலோ ரூ. 600 முதல் ரூ. 650 வரையிலும், மூன்றாம் தர சாதாரண மிளகின் விலை ரூ. 550 முதல் ரூ. 600 வரையிலும் விற்பனையானது.

சா்வதேச சந்தையில் மிளகின் தேவை அதிகரித்திருப்பதால், இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது ஏலத் தோட்ட விவசாயிகளையும், வியாபாரிகளையும் மகிழ்ச்சியடைய செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT