முகப்பு
தேனி

கேரளத்திற்கு கடத்திச் சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசி, காா் பறிமுதல் : ஒருவா் கைது

கம்பம் வழியாக கேரளத்திற்கு கடத்திச் சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

கம்பம் வழியாக கேரளத்திற்கு கடத்திச் சென்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை பறக்கும் படை அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான அதிகாரிகள், கம்பம்மெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, உத்ததமபாளையம் அருகே உ.அம்மாபட்டியைச் சோ்ந்த சுபாஷ் வந்த காரை சோதனையிட்ட போது, அதில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், கேரள மாநிலத்துக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அரிசி, காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியிலும், காா் ஓட்டுநா் சுபாஷை உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.