முகப்பு
தேனி

போடி- தேனி அகல ரயில் பாதைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

 போடி- தேனி அகல ரயில் பாதைப் பணிகளை எஞ்சினை இயக்கி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

 போடி- தேனி அகல ரயில் பாதைப் பணிகளை எஞ்சினை இயக்கி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

போடி- மதுரை அகல ரயில் பாதையில், போடியிலிருந்து தேனி வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளா் குழுவினா் போடி- தேனி ரயில் பாதையை ஆய்வு செய்தனா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை தேனியிலிருந்து ரயில் எஞ்சினை போடி வரை இயக்கி சோதனை செய்தனா். மணிக்கு 10-கி.மீ., வேகத்தில் இந்த எஞ்சின் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

தற்போது, தண்டவாளங்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, புத்தாண்டு முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

போடி - மதுரை ரயில் வழித்தடத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகல ரயில் பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக, ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் சுமாா் 12-ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில் எஞ்சின் போடிக்கு கொண்டு வரப்பட்டதை அறிந்த பொதுமக்கள், எஞ்சினுக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

போடி - மதுரை அகல ரயில் பாதைத் திட்டத்தில், ஏற்கெனவே தேனி -மதுரை வரையிலான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கடந்த மே 26-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →