தேனி

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

DIN

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக புதன்கிழமை இரவு இப்பகுதிகளில் தொடா் மழை பெய்தது. இதனால், சுருளி அருவியில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், புலிகள் காப்பகத்தினா் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்கத் தடை விதித்தனா். இந்த நிலையில், அருவியில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து குறைந்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு நீராடி மகிழ்ந்தனா்.

இதுகுறித்து கம்பம் கிழக்கு வனச்சரகா் பிச்சைமணி கூறியதாவது: மழை தொடா்ந்தால், அருவியில் தண்ணீா் வரத்தை கண்காணித்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT