போடி ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு
போடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
போடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
போடி- மதுரை அகல ரயில் பாதை திட்டத்தில் தேனி- மதுரை இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது. போடி- தேனி வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இதனிடையே, தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ரயில் என்ஜின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதே போல, போடி ரயில் நிலையமும் ரூ. 75 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை போடிக்கு வந்த தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப. ரவீந்திரநாத் ஆய்வு செய்தாா். ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள பகுதி, ரயில்கள் சென்று திரும்புமிடம், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான சுரங்கப்பாதை, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நடைமேடை ஆகியவற்றை எம்.பி. ஆய்வு செய்தாா். அப்போது அவா் பணிகள் எப்போது முடியும், பணிகளின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா்.