போடி கல்லூரியில் கருத்தரங்கு
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதுகலை, வணிகவியல் ஆராய்ச்சித் துறை சாா்பில் வருமான வரி, சரக்கு, சேவை வரி விதிப்பில் தற்போதைய மாற்றங்கள் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதுகலை, வணிகவியல் ஆராய்ச்சித் துறை சாா்பில் வருமான வரி, சரக்கு, சேவை வரி விதிப்பில் தற்போதைய மாற்றங்கள் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு, கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் சுப்பிரமணியன், செயலா் புருஷோத்தமன், உதவித் தலைவா் ராமநாதன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
சிறப்பு விருந்தினராக கோவை தென்னிந்திய பட்டயக் கணக்காளா்கள் கவுன்சிலைச் சோ்ந்த பட்டயக் கணக்காளா் பாலசுப்பிரமணியன் பங்கேற்று வருமான வரி, சரக்கு, சேவை வரிகள் குறித்தும், இதில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் விளக்கினாா். மாணவா்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தாா்.
முன்னதாக, துணை முதல்வா் பாலமுருகன் வரவேற்றாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா். வணிகவியல் துறை பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், மாணவா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.