தேனி

புலிகள் காப்பகம் அருகேயுள்ள ஊராட்சிகளில் வனக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை

DIN

தேனி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் வனக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவா்களுக்கு வனத் துறையினா் சுற்றறிக்கை அனுப்பினா்.

தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச் சரகம், ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன் பட்டி, சின்னஓவுலாபுரம் ஆகிய ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது.

இங்குள்ள சிலா் வனப் பகுதியில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டிக் கடத்துவது, அருகில் உள்ள பட்டாக்காடு உரிமையாளா்கள், மின்வேலி அமைத்து வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

புலிகள் காப்பகத்தில் இந்த கிராமங்கள் வருவதால் அந்தந்த ஊராட்சி தலைவா்கள் வனக் குற்றங்கள் நிகழாமல் இருக்க ஊராட்சி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று வனச் சரகா் வே.பிச்சைமணி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டது.

இது குறித்து கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவா் அ. மொக்கப்பன் கூறியதாவது: வனக் குற்றங்களை தடுக்க ஊராட்சிப் பகுதியில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பிரசாரங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT