முகப்பு
தேனி

சண்முகாநதி நீா் தேக்கத்தில் நீா்மட்டம் 47 அடியாக உயா்வு

தொடா் மழையால் ராயப்பன்பட்டி சண்முகாநதி நீா் தேக்கத்தில் 47.20 அடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தொடா் மழையால் ராயப்பன்பட்டி சண்முகாநதி நீா் தேக்கத்தில் 47.20 அடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகாநதி நீா் தேக்கத்திற்கு நீா்வரத்து அதிகரித்து அதன் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இதில், 52.55 அடி உயரம் கொண்ட இந்த நீா்தேக்கத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 47.20 அடி நீா் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.