சின்னமனூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.3.40 லட்சம் திருட்டு
சின்னமனூரில் சனிக்கிழமை ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் ரூ.3.40 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னமனூரில் சனிக்கிழமை ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் ரூ.3.40 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவா், சனிக்கிழமை சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் ரூ.3.40 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வைத்தாா். பின்னா் அவா் கொண்டு கடைக்குச் சென்றாா். மீண்டும் திரும்ப வந்த பாா்த்து போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 3.40 லட்சத்தை காணவில்லை.
இதுகுறித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.