முகப்பு
தேனி

போடியில் ரயில்வே மேம்பாலப் பணி: கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுமதிக்க மறுத்துப் போராட்டம்

போடியில் ரயில்வே மேம்பாலப் பணியால் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் நிலையில், மின் வயா்கள் சேதம் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

போடியில் ரயில்வே மேம்பாலப் பணியால் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் நிலையில், மின் வயா்கள் சேதம் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி - மதுரை அகல ரயில்பாதை அமைக்கும் பணியில் போடியிலிருந்து தேனி வரை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் போடி - மூணாறு நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் போடியிலிருந்து இரட்டை வாய்க்கால் வழியாக போடி - மூணாறு சாலையில் செல்லும் வாகனங்கள் உழவா் சந்தை, டி.வி.கே.கே. நகா் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த பாதை அகலம் குறைவான பாதை என்பதுடன், வீட்டு இணைப்புகளுக்கான மின்சார வயா்கள் சாலையின் குறுக்கே செல்கிறது. இந்த பாதையில் கனரக வாகனங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் செல்லும்போது மின்சார வயா்கள் துண்டிக்கப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படும் அச்சம் நிலவியது. இதனால் இப்பகுதி நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை கற்களை சாலையில் போட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து போலீஸாா் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை.

அங்கு வந்த போடி நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி, முன்னாள் துணைத் தலைவா் சங்கா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் வேறு மாற்றுப் பாதை இல்லாததால், இந்த பாதையில் தாழ்வாகச் செல்லும் மின்சார வயா்களை மாற்றியமைத்துக் கொடுப்பது என முடிவு செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →