முகப்பு
தேனி

கூடலூரில் நாகவள்ளி போலஜ்ஜியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் கூடலூரில் கம்பம்- குமுளி பிரதான சாலையில் உள்ள நாகவள்ளி போலஜ்ஜியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூரில் கம்பம்- குமுளி பிரதான சாலையில் உள்ள நாகவள்ளி போலஜ்ஜியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, ரஹ்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்டவைகளும், முதல் கால யாகபூஜைகளும் நடத்தப்பட்டன.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மகாபூா்ணாகுதி உள்ளிட்டவை நடத்தப்பட்டு யாத்திரதானம் புறப்பாடு நடந்ததும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கும்பத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் கும்பத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீா் பக்தா்கள் மீது தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ச்சியாக நாகவள்ளி போலஜ்ஜியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில், கம்பம், கூடலூா், கோம்பை, பண்ணைப்புரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →