முகப்பு
தேனி

லோயா்கேம்ப் பளியன்குடி பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பளியன்குடியில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு க. புதுப்பட்டி போ்லேண்ட்ஸ் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை களப்பயணம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பளியன்குடியில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு க. புதுப்பட்டி போ்லேண்ட்ஸ் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா்.

பளியன்குடி மாணவா்களோடும், அங்குள்ள பொது மக்களோடும் கலந்துரையாடி அவா்களது பண்பாடு கலாசாரம், கல்வி, வாழ்க்கைமுறை போன்றவற்றை தெரிந்து கொண்டனா். மாணவா்களின் கேள்விகளுக்கு தலைமையாசிரியா் ஜெ. முருகன் பதிலளித்தாா். போ்லேண்ட்ஸ் பள்ளித் தாளாளா் தீபலட்சுமி பளியன்குடியில் உள்ள பள்ளிக்கு ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிப் பெட்டியும், அங்குள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பலசரக்கு பொருள்களையும் வழங்கினா். பள்ளியின் உதவி ஆசிரியா் சித்ராதேவி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →