தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி ரகங்கள் தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி ரகங்கள் தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதை ஆட்சியா் க.வீ.முரளீதரன் தொடக்கி வைத்துப் பேசியது: கைத்தறி ஜவுளி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு மற்றும் கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நிகழாண்டில் தீபாவளி பண்டிகைக்கு மொத்தம் ரூ.54 லட்சத்திற்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் கே.சங்கா், மேலாளா்கள் பாலசுப்பிரமணியன், சந்திரசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.