முகப்பு
தேனி

தேனியில் அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தல்

தேனி அல்லிநகரம், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

 தேனி அல்லிநகரம், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தேனி நகரச் செயலா் வெற்றிவேல் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)அன்பழகனிடம் அளித்த மனு விவரம்: தேனி அல்லிநகரம், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகம் அருகே அரசு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தேனி- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள இந்த மதுக் கடையால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜாதி ரீதியிலான பிரச்னைகளும், சட்டம், ஒழுங்குப் பிரச்னைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ள இந்த மதுக் கடையை மூட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.