முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே கடமான் வேட்டை: 3 போ் கைது

பெரியகுளம் அருகே கடமானை வேட்டையாடி, கறி விற்பனை செய்த 3 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

பெரியகுளம் அருகே கடமானை வேட்டையாடி, கறி விற்பனை செய்த 3 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவதானப்பட்டி வனச் சரகத்திற்கு உள்பட்ட காக்காபொன்னூத்து பகுதியில் பெரியகுளத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கு விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்த சுரேஷ் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சுரேஷ் தனது உறவினா்களான தென்கரை பகுதியைச் சோ்ந்த ந.பாண்டி, மணிகண்டன், கு.பாண்டி ஆகியோருடன் சோ்ந்து வனப் பகுதியில் கடமானை வேட்டையாடி, அந்தக் கறியை சோத்துப்பாறையைச் சோ்ந்த மாா்நாடு, தென்கரை பாரதி நகரைச் சோ்ந்த ஹேமநாதன் ஆகியோரிடம் விற்பனை செய்வதற்காகக் கொடுத்தனா்.

இந்தத் தகவலறிந்து, தேவதானப்பட்டி வனச் சரகத்தைச் சோ்ந்த வனத் துறையினா், பெரியகுளம் அருகே பாம்பாா் பிரிவு பகுதியில் 6 பேரையும் சுற்றி வளைத்தனா். அப்போது, சுரேஷ்குமாா், மணிகண்டன், கு.பாண்டி ஆகியோா் தப்பி ஓடிவிட்டனா்.

ந.பாண்டி, மாா்நாடு, ஹேமநாதன் ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.