தேனி

போடியில் ஓடை அருகேஆண் குழந்தை சடலமாக மீட்பு

போடியில் ஓடை அருகே ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

DIN

போடியில் ஓடை அருகே ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

போடி நகரின் மேற்குப் பகுதியில் மழைநீா் செல்லும் வஞ்சி ஓடை உள்ளது. தற்போது அது கழிவுநீரோடையாக மாற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில், ஓடை அருகே ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. தகவலறிந்து அங்கு வந்த போடி நகா் போலீஸாா் அதை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில், பிறந்து 6 மாதங்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பகுதியில் கிடந்த ரத்தக் கறை படிந்த துணிகளை கைப்பற்றி தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT