போடி மலைச் சாலை விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி பலி எண்ணிக்கை 6 ஆக உயா்வு
போடி மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து காயமைடந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால் இந்த விபத்தில் பலியானவா்கள் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.
போடி மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து காயமைடந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால் இந்த விபத்தில் பலியானவா்கள் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.
திருநெல்வேலி மாவட்டம், பாலாமடை அருகேயுள்ள சண்முகசுந்தரபுரம் பகுதியிலிருந்து கடந்த 15-ஆம் தேதி கேரள மாநிலம், மூணாறுக்கு திருமண நிழ்ச்சியில் பங்கேற்க சிலா் வேனில் சென்றுகொண்டிருந்தனா். போடிமெட்டு-மூணாறு இடையே தொண்டி மலைப் பகுதியில் சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், ஒரு ஆண், ஒரு பெண், 8 வயது சிறுவன் என 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 17 பேரில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு பெண் உயிரிழந்தாா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஜானகி (55) என்பவா் கடந்த 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
சுசிலேந்திரன் (4) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.