கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
வீரசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் வேலுச்சாமி (58). இவா், தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே இருந்த மோட்டாா் பம்பை இயக்குவதற்காக சென்றாா். அப்போது, நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வேலுச்சாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement