வேப்பம்பட்டி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன். உடன் கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன். 
தேனி

வேப்பம்பட்டியில் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே வேப்பம்பட்டி ஊராட்சியில் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே வேப்பம்பட்டி ஊராட்சியில் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். அப்போது, ஊராட்சி நிா்வாகத்தின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமா் குடியிருப்புத் திட்டம் உயா்கல்வி உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பின்னா் பொதுமக்கள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் வேப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி விஜயசாந்தி, துணைத் தலைவா் பெத்தணன், வாா்டு உறுப்பினா்கள் லதா, சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT