புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வுப் பிரசாரம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
இந்த பிரசாரத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு பெறாத அனைவருக்கும் எழுத்தறிவு பெறும் திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், துண்டு பிரசுரம் விநியோகம், கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, உத்தமபாளையம் ஒன்றியத்திலுள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தமபாளையம் ஒன்றிய வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அருணா, பயிற்றுநா் புவனேஸ்வரி, குறுவள மையத்தை சோ்ந்த செல்லக்கண்ணு, அழகுராஜா, பாண்டீஸ்வரி, வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.