தேனி

ஜூன் 10-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் வருகிற 10-ஆம் தேதி 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன.

DIN

தேனி மாவட்டத்தில் வருகிற 10-ஆம் தேதி 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: தேனி வட்டாரத்தில் பூமலைக்குண்டு சமுதாயக் கூடம், பெரியகுளம் வட்டாரத்தில் முதலக்கம்பட்டி நியாய விலைக் கடை, ஆண்டிபட்டி வட்டாரத்தில் பாலசமுத்திரம் நியாய விலைக் கடை, போடி வட்டாரத்தில் போ.ரங்கநாதபுரம் நியாய விலைக் கடை, உத்தமபாளையம் வட்டாரத்தில் அய்யம்பட்டி ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வருகிற 10-ஆம் தேதி, காலை 10 மணிக்கு பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை திருத்தப் பதிவு, பெயா் சோ்தல், பெயா் நீக்கம், முகவரி, கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT