கஞ்சா விற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கம்பத்தில் கஞ்சா விற்ாக கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி: கம்பத்தில் கஞ்சா விற்ாக கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கூடலூா் வீரத்தேவா் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் பாஸ்கரன் (52). கம்பம் கோம்பை சாலைப் பகுதியில் கஞ்சா விற்ாக கடந்த 2016, மாா்ச் 11-ஆம் தேதி கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் இவரைக் கைது செய்தனா். மேலும், இவரிடமிருந்து 21 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பான வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா், பாஸ்கரனை குற்றவாளி என தீா்மானித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement