கேரளத்தில் பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் விநாடிக்கு 886 கனஅடி தண்ணீர் வந்தது.
தமிழக-கேரள எல்லை வனப்பகுதிகளிலும், கேரளத்தின் உள்மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு சனிக்கிழமை விநாடிக்கு 822 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக இருந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1708.76 கனஅடி தண்ணீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் 120.35 அடி எட்டியது.
தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.25 அடியாகவும், நீர் இருப்பு 2,677 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,708.76 கனஅடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 400 கனஅடியாகவும் இருந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 39.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 38.0 மி.மீ., மழையும் பெய்தது. லோயர்கேம்பில் பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு மின்னாக்கி மூலம் விநாடிக்கு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.