தேனி

கோ-ஆப் டெக்ஸ் சிறப்பு விற்பனை தொடக்கம்

தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

DIN

தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தேனி நேருசிலை அருகே உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:

கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பண்டிகைக் காலத்தில் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் திறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த விற்பனை நிலையத்தில் பல்வேறு புதிய ரக ஜவுளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

இங்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.47.85 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை நடைபெற்றது. நிகழாண்டில் ரூ.95 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் வா்த்தக மேலாளா் கே.சங்கா், மேலாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT