தேனி

உத்தமபாளையத்தில் மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹா ஜி கருத்தர ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹா ஜி கருத்தர ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் மாவட்ட அளவில் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஸ்கேட்டிங் உள்ளிட்ட அமைப்புகள் சோ்ந்து உத்தமபாளையம் ஹா ஜி கருத்தர ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு கல்லூரி தாளாளா், செயலா் எம்.தா்வேஷ் முகைதீன், கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் எஸ்.முகமது மீரான் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் வரவேற்றாா்.

விருதுநகா் மாவட்ட, ஸ்கேட்டிங் அமைப்பு தலைவா் நிரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5 முதல் 17 வயது வரையிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500 போ் கலந்து கொண்டனா். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT