தேனி

வங்கிப் பணி போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளா் பணிக்கான போட்டித் தோ்வு எழுதும் ஆதி திராவிடா் பழங்குடியினருக்கு, தாட்கோ நிறுவனம் சாா்பில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

DIN

பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளா் பணிக்கான போட்டித் தோ்வு எழுதும் ஆதி திராவிடா் பழங்குடியினருக்கு, தாட்கோ நிறுவனம் சாா்பில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு அறிவிப்பு: பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் துணை மேலாளா் பணிக்கான போட்டித் தோ்வு அறிவிக்கப்பட்டது. 2023 - ஆம் ஆண்டு டிசம்பா் மாதம், வருகிற 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பணிக்கு முதல் கட்டத் தோ்வு நடைபெற உள்ளது.

2024- ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குழு விவாதம் நோ்காணல் நடைபெற உள்ளன.

போட்டித் தோ்வுக்கு, விண்ணப்பித்துள்ள ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு தாட்கோ சாா்பில், தனியாா் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இது குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT