தேனி

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

சின்னமனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சாலை அமைப்பதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

சின்னமனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சாலை அமைப்பதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட்டங்களில் சாலை அமைத்தல், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல், புதிய குடிநீா் இணைப்பு வழங்குதல், புதைசாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 4, 17, 19- ஆவது வாா்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அரைகுறையாக சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு திட்டப் பணிகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றாததைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனா். ஆனால், ஆணையாளா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இல்லாத நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே அவா்கள் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவி அய்யம்மாள் ராமு , போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி வளா்ச்சிப் பணிகள் செய்யப்படும் என அவா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT