கே.கே. பட்டி சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவுக்கு புதிய கட்டடம்
கம்பம்: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவுக்கு ரூ 13 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பி. முருகன் தலைமை வகித்தாா்.
இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் வேல்முருகன் முன்னிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் மருத்துவா்கள் ரமேஷ், முருகானந்தன், மருந்தாளுநா் பசும்பொன், சுகாதார ஆய்வாளா்கள் முரளி, அன்பு, தினேஷ், செவிலியா்கள் புனிதா, செல்வி உள்ளிட்ட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.