தேனி

தேனியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்: 126 போ் கைது

Din

தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி, புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்.

தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் இணைய வழி பணியிட மாறுதல் கலந்தாய்வை நிறுத்த வலியுறுத்தி, தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில், புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். நிதிக் காப்பாளா் சரவணமுத்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் எஸ்.கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு மாநில அளவில் நடைபெறும் இணைய வழி பணியிட மாறுதல் கலந்தாய்வை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களை வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 126 ஆசிரிய, ஆசிரியைகளை தேனி போலீஸாா் கைது செய்தனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT