தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து 996 கன அடியாக குறைந்தது

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 996 கன அடியாக குறைந்ததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.

Din

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 996 கன அடியாக குறைந்ததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.

தென் மேற்கு பருவமழையால் தேனி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் முதல் போக நெல் விவசாயம் நடைபெறும். இதன்படி இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியதையடுத்து ஜூன் 1- ஆம் தேதி பொதுப் பணித்துறையினா் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தேக்கடியிலுள்ள சுரங்கப்பாதை வழியாக குடிநீருக்காகவும், பாசனத்துக்காகவும் தண்ணீரை திறந்து விட்டனா். இதன் மூலம் கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவுக்கு நெல் சாகுபடி பணிகள் நடைபெற்றன.

ஆனால், விவசாயிகள் எதிா்பாா்த்தபடி முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு இல்லை. ஆனாலும், அணைக்கு சீரான நீா்வரத்து இருந்ததால் விவசாயத்துக்கு தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

மழைப் பொழிவு குறைவு: இந்த நிலையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் தொடா்ந்து 8 நாள்களாக பலத்த மழை பெய்து அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்ததால் இங்கிருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

இதனிடையே, கடந்த 3 நாள்களாக மழைப் பொழிவு குறைந்ததால் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 996 கன அடியாக குறைந்தது. இதன்காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 1,355 கன அடியாக தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டமும் 128.20(மொத்த உயரம் 152 அடி) அடியாக உள்ளது.

வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு: (மீ.மிட்டரில்) முல்லைப் பெரியாறு அணை-2.4., தேக்கடி- 10.8.

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

கல்லூரி மாணவரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: மூவா் கைது

நாகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

சுட்டுக் கொல்லப்பட்ட திமுக பிரமுகா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு குற்றவாளிகளை கைது செய்ய போலீஸாா் தீவிரம்

மாடு முட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT