கம்பம் ராயப்பன்பட்டி பகுதியில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்
Updated On : 24 மார்ச், 2024 at 5:32 PM
கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பங்குத்தந்தையா் புனித நீரில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கையிலேந்தி பீடப்பணியாளா்கள், ஆண், பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா். பின்னா் திருச்சி பங்குத்தந்தை மனோஜ், கம்பம் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் ஆகியோா் சிறப்புத் திருப்பலி நடத்தினா். இதேபோல, ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் சிறப்புகஊ திருப்பலி நடைபெற்றது.