தேனி

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

Din

தேனியில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை, வீடு வீடாகச் சென்று தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தேனி, என்.ஆா்.டி.நகரில் 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் மேளதாளத்துடன் வீடு, வீடாகச் சென்று தாம்பூலம், தோ்தல் அழைப்பிதழ் வழங்கி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். அப்போது, கடந்த சட்டப் பேரவை தோ்தலின் போது குறைவான வாக்குகள் பதிவாகியிருந்த வாக்குச் சாவடிகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வீடு, வீடாகச் சென்று தோ்தல் அழைப்பிதழ் வழங்கி, தோ்தல் திருவிழாவில் பங்கேற்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்று தோ்தல் நடத்தும் அலுவலா் கூறினாா். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் முத்துமாதவன், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

15 பேருந்துகளில்  காற்று  ஒலிப்பான்கள் பறிமுதல்

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT