தேனி மாவட்டத்தில் மழை: அணைகளுக்கு நீா் வரத்து
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா் வரத்து ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெரியகுளம், வீரபாண்டியில் அதிகளவாக 60 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ஆண்டிபட்டியில் 12.8 மி.மீ., அரண்மனைப்புதூரில் 31.2, மஞ்சளாறு அணை 15, சோத்துப்பாறை அணை 11, வைகை அணை 12.6, போடியில் 13.4, உத்தமபாளையத்தில் 15.2, கூடலூரில் 8.8. சண்முகாநதியில் 16.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதேபோல, முல்லைப் பெரியாறு அைணைப் பகுதியில் 24.8 மி.மீ., தேக்கடியில் 6 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 405 கன அடி, வைகை அணைக்கு விநாடிக்கு 197 கன அடி, மஞ்சளாறு அணைக்கு விநாடிக்கு 73 கன அடி, சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீா் வரத்து இருந்தது.