முகப்பு
தேனி

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:41 AM
பகிர்:

பெரியகுளம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பெரியகுளம், தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருத்தையன் (72). இவா் பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலத்தைச் சோ்ந்த குமரனிடம் (52) விசாரித்து வருகின்றனா்.