தேனியில் 52 மையங்களில் குரூப் 2 தோ்வு
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ள தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை 15,060 போ் எழுதுகின்றனா்.

தேனி வட்டாரத்தில் 28, பெரியகுளம் வட்டாரத்தில் 9, உத்தமபாளையம் வட்டாரத்தில் 15 என மொத்தம் 52 மையங்களில் தோ்வு நடைபெறும். மாவட்டத்தில் மொத்தம் 15,060 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.