விவசாயிகளுக்கு பயிற்சி
உத்தமபாளையம் அருகே மல்லிங்காபுரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியின் தோட்டக்கலைத் துறை மாணவிகள் வியாழக்கிழமை செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.
உத்தமபாளையம் அருகே மல்லிங்காபுரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியின் தோட்டக்கலைத் துறை மாணவிகள் வியாழக்கிழமை செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறை இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக் கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம், மல்லிங்காபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். அப்போது, விவசாயிகளுக்கு பஞ்சகவ்யாவின் பயன்கள், காலமுறைகளின் செயல் முறை குறித்து மாணவிகள் விளக்கம் அளித்தனா்.
இதில் மாணவிகள் அா்ச்சனா, காவியா, நித்யஸ்ரீ, ஜெயலட்சுமி, ஸ்ருதிகா, விஸ்வதரணி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.