முகப்பு
தேனி

பீட்ரூட் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

உத்தமபாளையம் பகுதியில் பீட்ரூட் நல்ல விளைச்சல் இருந்தும், கேரள வியாபாரிகள் வருகை குறைவு காரணமாக புதன்கிழமை பீட்ருட் கிலோ ரூ.5-க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:25 PM
அணைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பீட்ரூட்டை புதன்கிழமை அறுவடை செய்த பெண் தொழிலாளா்கள்.
பகிர்:

உத்தமபாளையம் பகுதியில் பீட்ரூட் நல்ல விளைச்சல் இருந்தும், கேரள வியாபாரிகள் வருகை குறைவு காரணமாக புதன்கிழமை பீட்ருட் கிலோ ரூ.5-க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், அணைப்பட்டி, கே.கே.பட்டி, ராயப்பன்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகள் மேற்குத் தொடா்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் பீட்ரூட் விவசாயம் அதிகளவில் நடைபெறுகின்றன. 60 நாள்கள் பராமரிப்பிக்கு பின் அறுவடை செய்யப்படும் இந்த பீட்ரூட் அதிகளவில் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அணைப்பட்டி பகுதிகளில் தற்போது பீட்ரூட் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண் தொழிலாளா்கள் மூலம் பீட்ரூட் தரம் பிரிக்கப்பட்டு 2 ரகங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதன்படி, ரூ.3200-க்கு விற்ற ஒரு மூட்டை பீட்ரூட், தற்போது கேரள வியாபாரிகள் வருகை குறைவு காரணமாக ஒரு மூட்டை ரூ.400-க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி செல்வேந்திரன் கூறியதாவது: மருந்து விலை, கூலி ஆள்கள் சம்பளம், பராமரிப்புச் செலவு என அனைத்து விலைகளும் பல மடங்கு உயா்ந்து விட்டன. ஆனால், விவசாயிகளால் விளைவிக்கப்படும் வேளாண் உணவுப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே, விவசாயப் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.