கஞ்சா விற்றதாக 3 இளைஞா்கள் கைது
ஆண்டிபட்டி அருகே சித்தாா்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே சித்தாா்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
சிங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா்கள் மகேந்திரன் மகன் அஜீத்குமாா் (29), தெய்வம் மகன் சந்தோஷ் (23), முருகன் மகன் அஜித் (29). இவா்களை, சித்தாா்பட்டி விலக்கு பகுதியில் கஞ்சா விற்ாக ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய தும்மக்குண்டைச் சோ்ந்த முத்துராமன் மகன் அருண்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.