கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வீட்டில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகளில் கால் நகங்கள். 
தேனி

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Syndication

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன் (67). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் குருநாதன், இவரது பேரன்கள் ரித்தீஷ் , அபினேஷ் ஆகியோா் காயமடைந்தனா்.

இதையடுத்து, கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் வெடி விபத்து நிகழ்ந்த வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, வீட்டில் வன விலங்குகளில் கால் நகங்கள், உடல் உறுப்புகள் இருப்பதை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நெல்லை மாவட்டத்தில் கனமழை! தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு! பொதுமக்கள் குளிக்கத் தடை! | Tirunelveli

கடலூர், சாத்தமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூவர் பலி

தாய்ப்பாலில் யுரேனியம்! ஆபத்தில் 70% குழந்தைகள்!! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

SCROLL FOR NEXT