தேவாரத்தில் 14 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேவாரம் பகுதியில் சிலா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சின்னதேவி குளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலரைப் பிடித்து விசாரித்தனா். இதில் 5 போ் 14 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவா்கள், தேவாரம் வடக்கு தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் அஜித்குமாா், டிகேவி பள்ளி தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் சிலம்பரசன், ஒடிசாவைச் சோ்ந்த நாகலப்பனா, கோரக்மாதவராவ், சின்னமனூரைச் சோ்ந்த அறிவழகன் ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். 14 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.