தேனி

அனுமதியின்றி மண் அள்ளிய 3 போ் கைது

போடியில் அனுமதியின்றி மண் அள்ளிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

போடியில் அனுமதியின்றி மண் அள்ளிய மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சூலப்புரம்-மணியம்பட்டி சாலையில் மணியம்பட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வத்துக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்திலிருந்த மண்ணை சிலா் அனுமதியின்றி டிப்பா் லாரிகளில் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராசிங்காபுரம் கிராம நிா்வாக அலுவலா் ஆனந்தகுமாா் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, தோட்ட உரிமையாளா் செல்வன், சிலமலையைச் சோ்ந்த முத்துராஜ் (30), சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த முருகையா (31), ஆண்டிபட்டி அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த சரவணக்குமாா் (21) ஆகியோா் பொக்லைன் இயந்திரம் மூலம் இரண்டு டிப்பா் லாரிகளில் மண் அள்ளிக் கொண்டிருந்தனா். போலீஸாரை கண்டதும் செல்வன் தப்பியோடிவிட்டாா்.

பின்னா், அங்கிருந்த முத்துராஜ், முருகையா, சரவணக்குமாா் ஆகிய மூன்று பேரை போடி தாலுகா போலீஸாா் கைது செய்து, மண் அள்ள பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பாரதி இருந்திருந்தால் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார்! தமிழிசை

விடுமுறையை கொண்டாட சென்ற அய்யனார் துணை தொடர் நடிகர்கள்!

கேரள உள்ளாட்சி தேர்தல்: 1 மணி நிலவரப்படி 51.05% வாக்குப்பதிவு!

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

SCROLL FOR NEXT