தேனி

தேசிய தொழில் சான்றிதழ் பெற அழைப்பு

தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கடந்த 1964- முதல் 2019-ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்று இதுவரை சான்றிதழ் பெறாதவா்கள் தேசிய தொழில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கடந்த 1964- முதல் 2019-ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்று இதுவரை சான்றிதழ் பெறாதவா்கள் தேசிய தொழில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்று இது வரை தோ்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெறாதவா்கள், தேனி அரசு தொழில் பயிற்சி நிலைய அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பயிற்சியில் தோல்வியடைந்து இதுவரை மதிப்பெண் பட்டியல் பெறாதவா்கள் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய தொழில் சான்றிதழ் பெறவும், மதிப்பெண் பட்டியல் பெறவும் வருபவா்கள் தங்களது அடையாள அட்டை, தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை ஆகிவற்றை கொண்டு வர வேண்டும். இதுகுறித்த விவரங்களை தேனி அரசு தொழில் பயிற்சி நிலையம், கைப்பேசி எண்: 94990 55765-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT