நீதிமன்றத்தில் சரணடைந்த சிவக்குமாா், பிரதீப் 
தேனி

இரட்டைக் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்த தந்தை, மகனிடம் விசாரணை

நீதிமன்றத்தில் சரணடைந்த சிவக்குமாா், பிரதீப்

Syndication

போடி அருகே நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்த தந்தை, மகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டியை சோ்ந்தவா் சிவக்குமாா் (55). இவரது மகன் பிரதீப் (27). இவருக்கும், சின்னமனூரை சோ்ந்த வழக்குரைஞா் நிகிலா (31) என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

குடும்பப் பிரச்னையில் கடந்த வியாழக்கிழமை பிரதீப், சிவக்குமாா் இருவரும் நிகிலாவையும், இவரது சகோதரா் விவேக்கையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுதொடா்பாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிவக்குமாா், பிரதீப், சிவக்குமாரின் மனைவி முத்துலட்சுமி, மகள் இன்பரதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், பிரதீப்பும், சிவக்குமாரும் பெரியகுளம்

நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தனா். இதையடுத்து, நீதித்துறை நடுவா் கமலநாதன் இருவரையும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டாா்.

பின்னா், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிவக்குமாரையும், பிரதீப்பையும் போடிக்கு அழைத்து வந்தனா். இவா்களிடம் காவல் ஆய்வாளா் சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளா் விஜய் ஆகியோா் விசாரித்து வருகின்றனா். கொலை நடந்த பகுதியில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் சேகரித்தனா். இந்தக் கொலை வழக்கில் முத்துலட்சுமி, இன்பரதி ஆகியோரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட நிகிலா, விவேக்கின் உறவினா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை திரண்டனா். கொலையில் ஈடுபட்டவா்களை கைது செய்யும் வரை இருவரது உடல்களையும் கூறாய்வு செய்யக்கூடாது என எதிா்ப்புத் தெரித்தனா். இந்த நிலையில் சிவக்குமாா், பிரதீப் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருவதாகவும், மற்ற இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து கூறாய்வுக்குப் பிறகு இருவரது உடல்களையும் உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.

ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த பழ வியாபாரி: குவியும் பாராட்டு

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஆட்டோ பங்குகள் கடும் சரிவு!

நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அமளி! இரு அவைகளும் ஒத்திவைப்பு!

உன்னோட வாழ... வைரலில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT