தேனி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

சின்னமனூரில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காலபைரவா்.

Syndication

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்-சிவகாமியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

205-ஆவது மாதாந்திரஅஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு திருவிளக்கு பூஜை, மூல மந்திர ஹோமம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, காலபைரவருக்கு 108 பால் குட அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில், சின்னமனூா் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த பழ வியாபாரி: குவியும் பாராட்டு

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஆட்டோ பங்குகள் கடும் சரிவு!

நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அமளி! இரு அவைகளும் ஒத்திவைப்பு!

உன்னோட வாழ... வைரலில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT